கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கனடிய நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் தனது பரிந்துரைகளை கனடிய சுகாதாரத்துறை மற்றும் பொதுசுகாதாரத்துறை ஆகிய தரப்புக்களுக்கும் பரிந்துரைத்துள்ளது.
கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசியை உட்செலுத்தும் போது ஏற்படுகின்ற பக்கவிளைவுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் பரந்துபட்ட ஆய்வொன்று அவசியம் என்றும் தேசிய ஆலோசனைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.





