யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக, தற்போது 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் இதுவரை 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில், 26 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகிய 2 ஆயிரத்து 35 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும், இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதிகள், இரண்டு தடவைகளில் பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்கப்பட்டு வருவதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், தெரிவித்துள்ளார்.





