தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கிடையில் நாளை புதன்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்து.
கொழும்பில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் மேலும் சில துறைசார் நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகளும் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகின்றது.
இந்தச் சந்திப்பில் எதிர்வரும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை வலியுறுத்திய புதிய பிரேரணை தொடர்பான தமிழ்த் தரப்புக்கள் ஒன்றுபட்ட நிலைப்பாடொன்றை வெளிப்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.





