யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டமைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கீச்சகத்தில் பதிவுவொன்றை செய்துள்ள அவர், குறித்த செய்தி தனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள சிறிலங்கா அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் அவர் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை தமிழகத்தின் துணைமுதலமைச்சர் பன்னீர் செல்வமும் நினைவேந்தல் தூபி உடைப்பு தனது கண்டனத்தினை வெளிப்படுத்தியுள்ளதோடு, தமிழர்களின் இதயத்தினை பதிக்கும் செயலை சிறிலங்கா பாதுகாப்பு தரப்பு செய்து மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.





