நீதியமைச்சர் அலி சப்ரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு சிங்கள அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிங்களே கூட்டு தேசிய ஒன்றியத்தினால், நாளை பிற்பகல் 2 மணியளவில், கண்டியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
சட்டத்தரணிகளை காவல்துறை பரிசோதகர்களாக நியமிக்க நீதியமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்றும், குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் பீடாதிபதிகளிடமும், அலி சப்ரியை பதவியில் இருந்து நீக்குவது குறித்து சிங்களே கூட்டு தேசிய ஒன்றியத்தினால் வலியுறுத்தப்படவுள்ளது.





