Boeing’s 737 Max வானூர்திகள் நாளை மறுதினம் புதன்கிழமை முதல் பறப்பதற்கு கனடா அனுமதித்தள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னதாக சீரான இடைவெளியில் நடைபெற்ற இரண்டு விபத்துக்களுக்கு பின்னர் இந்த வகை வானூர்திகளை பறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து வானூர்திகளின் சில திருத்தங்கள் செய்யப்பட்டதன் பின்னர் தற்போது அவை பறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சில சோதனை பறப்புக்களும் இடம்பெற்றதாகவும், அதன்போது வழமைக்கு மாறான நிலைமைகள் எவையும் இருக்கவில்லை என்றும் விமானிகள் தெரிவித்துள்ளனர்.





