கிட்டத்தட்ட 3 மாதங்கள் தலைமறைவாக இருந்த அலிபாபா நிறுவனர் ஜக் மா (jack ma ), நீண்ட இடைவெளிக்கு பின்னர் பகிரங்கமாக தோன்றியுள்ளார்.
சீன கோடீஸ்வரரும், சீனாவின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனருமான ஜக் மா (jack ma ) வுக்கும் சீன அரசுக்கும் அண்மையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
இதையடுத்து அவரது நிறுவனங்களுக்கு எதிராக , சீன அரசு, நடவடிக்கைகளை எடுத்திருந்தது,
இந்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் ஜக் மா(jack ma ), எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாததால், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் பரவின.
இந்நிலையிலேயே கிராமப்புற ஆசிரியர்களுடன் இணையவழி கலந்துரையாடலில் ஜக் மா (jack ma ) கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.





