கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெப்ரவரி 14 ஆம் நாள் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீடித்து ஜெர்மனி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதியவகை உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய அந்நாட்டு ஜனாதிபதி ஏஞ்சலா மார்க்கெல் (angela merkel) அச்சுறுத்தும் வகையில் கொரோனா தொற்று பரவி வருவதால் ஊரடங்கை நீடிக்க வேண்டியது அவசியமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 16 மாகாண ஆளுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், இங்கிலாந்தில் இருந்து பரவிய உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் ஜெர்மனியில் பரவியுள்ளதைத் தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாகத் குறிப்பிட்டுள்ளார்.





