எல்லையில் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சு எச்சரித்துள்ளது.
லடாக் எல்லையில் நிகழ்ந்த மோதலைத் தொடர்ந்து இரு தரப்பும் படைகளைக் குவித்துள்ளதுடன், மோதல் போக்கும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சிக்கிம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன இராணுவத்தினரின் முயற்சியை இந்திய இராணுவத்தினர் முறியடித்துள்ளனர்.
இதில் 20இற்கும் அதிகமான சீன இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக இந்தியத் தரப்பில் கூறப்பட்டது.
சிக்கிம் எல்லையில் நிகழ்ந்த இந்த மோதல் குறித்து சீன வெளியுறவு அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
“இந்திய எல்லையில் அமைதியை நிலைநாட்ட சீன இராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்லையில் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
எல்லை பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்றும் சீனா கூறியுள்ளது.





