தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னரே, முதலமைச்சர் பழனிசாமி ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாகவே தமிழக ஆளுநரை, முதலமைச்சர் சந்தித்துள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் நல்ல முடிவை எடுத்து 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார் என்றும், அமைச்சர் ஜெயக்குமார் மேலும் கூறியுள்ளார்.





