அமெரிக்காவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள குவாண்டனாமோ (Guantanamo) மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்த கியூபாவின் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக விமானி உள்ளிட்ட 5 பேருடன் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உலங்கு வானூர்தி புறப்பட்டு, சிறிது நேரத்தில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால், அதனைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தேடுதலின் போது, ஒரு மலையின் மீது உலங்கு வானூர்தி மோதி விபத்துக்குள்ளானது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மீட்புக் குழுக்கள் விரைந்து சென்று, அதில் பயணம் செய்த 5 பேரின் சடலங்களையும் மீட்டுள்ளனர்.





