பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்தை, நீதிமன்ற உத்தரவுகள் மூலம் தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.
இதற்கமைய, சிறிலங்கா காவல்துறையினர் மூலம், நீதிமன்ற தடையுத்தரவுகள் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, மக்களை தூண்டிவிட தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்து, சிறிலங்கா காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம், போராட்டங்களை நடத்த களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றக் கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





