தமது நாட்டில், கொரோனா தடுப்பூசி திட்டம் பாதிக்கப்படாமல் இருந்தால்தான், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என பிரித்தானியா நிபந்தனை விதித்துள்ளது.
இதுகுறித்து பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் எலிசபெத் ட்ரஸ் (Elizabeth Truss) கூறுகையில், ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக 36 கோடி தடுப்பூசிகளை தயாரிப்பு நிறுவனங்களிடம் பிரித்தானியா அரசாங்கம் கேட்டுள்ளது.
அந்தத் தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்புவதால், தற்போது பிரித்தானியாவில் நடைமுறைப்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது.
ஏற்கனவே நிர்ணயித்த வகையில் கொரோனா தடுப்பூசி திட்டம் செயற்படுத்தப்பட்டால்தான் அந்தத் தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். ” என்று தெரிவித்துள்ளார்.





