ரொறன்ரோவில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளனர்.
Etobicoke பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணாமல் போன ஒருவர் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரிக்கச் சென்ற போது, திடீரென வெளிப்பட்ட ஒருவர், கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை அதிகாரிகள் அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.





