ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயிர்ஸ்தானிகரின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
ஏற்கனவே காணொளிகள் பல வேறு நாடுகளில் இடம்பெற்ற சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதை தம்மால் நிரூபிக்க முடிந்ததாக கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.
சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பதை தம்மால் பொதுவாகக் கூற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பல நாடுகளில் அரசாங்கங்களுக்கு அரசியல் தேவைகள் உள்ளன. உதாரணமாக டொரன்டோவில் இலங்கையர்களின் வாக்குகள் மிக முக்கியமானவை.
லண்டனில் முக்கிய பதவியாக மேயரை நியமிப்பதற்குத் தேவையான அரசியல் பின்புலம் இலங்கையுடன் தொடர்புடையது. இவை குறித்து நாம் அறியாமல் இல்லை என்றும் இதன்போது அவர் புன்னகையுடன் கூறியமை குறிப்பிடத்தக்கது.





