சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் வந்துள்ள சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.
பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பும் வழியில், வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா,
“தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை. மக்கள் அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை. அடக்குமுறைக்கு நான் அடிப்பணிய மாட்டேன்.
தீவிர அரசியலில் ஈடுபடுவேன்; விரைவில் எல்லோரையும் சந்திப்பேன்.
அவசரமாக ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது எதை காட்டுகிறது என மக்களுக்கு தெரியும்.” என்று கூறியுள்ளார்.
அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு ‛பொறுத்திருந்து பாருங்கள்’ என பதிலளித்த சசிகலா அதிமுக கட்சியை கைப்பற்றுவீர்களா என்ற கேள்விக்கு, ‛மிக விரைவில் எல்லோரையும் சந்திக்கிறேன், அப்போது சொல்கிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.





