ஒன்ராரியோவில் உள்ள பல பாடசாலைகள் 2021ஆம் ஆண்டுக்கான வகுப்பு பட்டமளிப்பு விழாக்களை மெய்நிகர் முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுக் காரணமாக, விழாக்களை நடத்துவது வாய்ப்பில்லை என்பதாலேயே, மெய்நிகர் முறையில் பட்டமளிப்பு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான உயர்நிலைப் பாடசாலைகளில் பட்டமளிப்பு விழாக்களை நடத்துவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.
இதனால் சில பாடசாலைச் சபைகள், மெய்நிகர் முறையில் ஜூன் மாதம் பட்டமளிப்பு விழாக்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மெய்நிகர் முறையிலேயே பட்டமளிப்பு விழாக்களை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ள ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபை, எனினும், சில பாடசாலைகள் நெகிழ்வுப் போக்கில் முடிவெடுக்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.





