சவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள அராம்கோ நிலையத்தின் மீது, யேமனின் ஹவுத்தி படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளன.
இன்று அதிகாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஏவுகணை அதன் இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து சவுதி அரேபியா உடனடியாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
வடக்கு யேமனைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுத்தி படைகள், சவுதி அரேபியாவின் எரிசக்தி சொத்துக்களை குறிவைத்து தாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





