அலெக்ஸி நவால்னியை (Alexei Navalny) கொலை செய்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில், ரஷ்யாவை சேர்ந்த 7 முதுநிலை அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் நடவடிக்கை இதுவாகும்.
இந்த தாக்குதல் தொடர்பாக இரசயான மற்றும் உயிரியியல் ஆயுதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த பொருளாதார தடை விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜெனீஃபர் ஸாகி (Jennifer Sackie) தெரிவித்தார்.





