2019 ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்குவதற்கு தமது அரசு நீதியினுடாக நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை அவர் தெரிவித்தார்.
எனினும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற கூற்றுகளை தாம் நிராகரிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
முன்னைய அரசாங்கத்தின் பலவீனம் காரணமாகவே 2019 இல் மீண்டும் குண்டுகள் வெடித்தன என ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் அப்போதைய அரசாங்கம் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.





