உலகில் மிக சுதந்திரமான 10 நாடுகளின் பட்டியலில், கனடா மூன்றாவது இடத்தில் உள்ளதாக Freedom House அறிவித்துள்ளது.
அரசியல் உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் அணுகப்படும் விதத்தை அடிப்படையாக கொண்டு, 210 நாடுகளை உள்ளடக்கிய இந்த தரவரிசை பட்டியல் Freedom House அமைப்பினால், தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பின்லாந்து, நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் 100 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளன.
நியூசிலாந்து 99 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
நெதர்லாந்து, உருகுவே மற்றும் கனடா ஆகிய நாடுகள் 98 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளன.
கனடாவுக்கு, அரசியல் உரிமைகளுக்காக 40 க்கு 40 புள்ளிகளும், சிவில் உரிமைகளுக்காக 60க்கு 58 புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.





