மியான்மாரின் யங்கோன் ( Yangon) நகரில் பாதுகாப்புப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த, போராட்டக் காரர்கள், இரவில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மியான்மாரின் இராணுவ ஆட்சியாளருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பொதுமக்கள், நான்கு வீதிகளைக் கொண்ட பகுதி ஒன்றுக்குள் மியான்மார் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 40 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஏனையவர்கள், இரவோடு இரவாக, முற்றுகையை உடைத்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று உள்ளூர் வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மியான்மார் படைகள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து வெளியேறியிருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.





