சர்வதேச அளவில் மூன்றில் ஒரு பெண் பாலியல் அல்லது உடலியல் ரீதியில் வன்முறையை எதிர்கொள்ளும் நிலை காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது.
15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 39 வீதமானவர்கள் பாலியல் அல்லது உடல் ரீதியிலான வன்முறையை எதிர்கொண்டுள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
2000 முதல் 2018 வரையில் மேற்கொண்ட ஆய்வினை அடிப்படையாக வைத்தே உலக சுகாதார ஸ்தாபனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கணவர் அல்லது நெருங்கிய துணைவரே அதிகளவில் வன்முறைகளில் ஈடுபடுகின்றார் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்படுபவர்களில் அதிகளவானவர்கள் வறிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





