வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலை பேருந்துகளை மாற்று ஊழியர்களைப் பயன்படுத்தி, இயக்குவதற்கு சுகாதாரத் துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
காரைநகர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை 90 ஊழியர்களிடம் மாதிரிகள் பெறப்பட்டு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், 8 பேருக்கு கோரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, காரைநகர் சாலையில் பணியாற்றும் 110 ஊழியர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால், காரைநகர் சாலை பேருந்துகள் எவையும் நேற்றும் இன்றும், சேவையில் ஈடுபடவில்லை.
இந்த நிலையில், வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஏனைய சாலை ஊழியர்களை பணிக்கு அமர்த்தி காரைநகர் சாலை பேருந்து சேவைகளை நடத்துமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.





