அமமுக கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி தொகுதியில் அதிமுக அரசில் அமைச்சராக உள்ள கடம்பூர் ராஜூவை எதிர்த்து அவர் போட்டியிடவுள்ளார்.
அத்துடன், இன்று அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்து கொண்ட, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தினகரனுடன் இணைந்து செயற்பட்ட நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
போடி தொகுதியில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை எதிர்த்து அமமுகவின் சார்பில் முத்துசாமியும், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து அமமுக சார்பில் பூக்கடை சேகரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





