ஒன்ராறியோவின் கொரோனா தடுப்பு செயலணியின் தலைவராக பணியாற்றும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் றிக் ஹில்லியர் (Rick Hillier) இந்த மாத இறுதியுடன் பணியில் இருந்து விடைபெறவுள்ளதாக முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நொவம்பர் 23ஆம் நாள் றிக் ஹில்லியர் (Rick Hillier) இந்த செயலணிக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இவரது பணிக்காலம் மார்ச் 31ஆம் நாளுடன் நிறைவடையவுள்ளது.
இவரது மேற்பார்வையில் ஒன்ராறியோவில் ஒரு மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




