அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பனவை என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோவும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
ஜேர்மன், இத்தாலி, மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த தடுப்பூசி தொடர்பான ஆய்வறிக்கைகளை வெளியிட்டு எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசி தொடர்பில் சாதகமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தமது நாட்டின் ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம் அது பாதுகாப்பனது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கனடாவில் இந்த தடுப்பூசியை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.





