கொரோனா தொற்று சம்பந்தமான தற்போதைய தரவுகள் ரொரண்டோவை சிவப்பு வலத்திற்குள் வகைப்படுத்துவதற்கான நிலைமையைக் கொண்டிருக்கவில்லை என்று பொதுசுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் எலைன் டி வில்லா (Eileen de Villa) தெரிவித்துள்ளார்.
மேலும், உணவகங்கள், திறந்தவெளி சிற்றூண்டிச் சலைகள், உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றின் செயற்பாடுகள் தொடர்வதற்கு தொடர்ந்தும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்தப் பகுதிகளில் தொடர்ந்தும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் உயர்ந்த மட்டத்தில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





