பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தலுக்கான பட்டியல் குறித்த புதிய அறிவிப்பை மாகாணம் வெளியிட்டுள்ளது.
இதில் ஆசிரியர்கள் மற்றும் பிற முன்னணித் தொழிலாளர்கள் ஏப்ரல் மாதத்தில் கொரோனா தடுப்பூசிகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சாதாரண வர்த்தக ஊழியர்கள், குழந்தைப் பராமரிப்பு ஊழியர்கள், அஞ்சல் ஊழியர்கள் மற்றும் பலர் அதற்கு அடுத்த பட்டலில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டவர்கள் அஸ்ட்ராஸெனெகா, கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் முதல் அளவைப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




