ரொரன்டோ சென்.ஜேம்ஸ் ரவுணில் (St. James Town) நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
அப்பகுதியில் துப்பாக்கி வேட்டுகள் கேட்டதை அடுத்து, அங்கு சென்ற அவசர சேவை அதிகாரிகள், காயமடைந்த நிலையில் இருந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரை மீட்டுள்ளனர்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட குறித்த இளைஞன், தற்போது உயிராபதைக் கடந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.




