சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சினோபாம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை, சிறிலங்காவில் உள்ள சீன பிரஜைகளுக்கு செலுத்துவதற்கே அனுமதி வழங்கப்பட்டதாக தேசிய ஒளடத ஒழுங்குமுறை அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும், சிறிலங்கா மக்களுக்கு குறித்த தடுப்பூசியை செலுத்துவது தொடர்பில், இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என அந்த அதிகார சபையின் தலைவரான மருத்துவ நிபுணர் கமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அது குறித்து, விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 6 இலட்சம் சினோபாம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் நன்கொடையாக சிறிலங்காவுக்கு கிடைக்கவுள்ளன.
அவற்றைக் கொண்டுவருவதற்கு, தேசிய ஒளடத ஒழுங்குமுறை அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





