சமஷ்டி என்ற பேச்சுக்கே சிறிலங்காவில் இடமில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பு உருவாக்க நிபுணர் குழுவிடம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் சி.வி.விக்னேஸ்வரன் சமர்ப்பித்திருந்த யோசனையில், புதிய அரசமைப்பில் சமஷ்டி முறைமை உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சரத் வீரசேகர,
“சமஷ்டி என்ற பேச்சுக்கே இந்த ஆட்சியில் இடமில்லை.
இந்த முறைமை புதிய அரசமைப்பில் இருக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் அணியினர் கனவு காணக்கூடாது.
நடைமுறையில் இருக்கும் ஒற்றையாட்சி முறைமை மூலம்தான் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.
புதிய அரசமைப்பில் இது தொடர்பில் தெளிவாகப் குறிப்பிடப்படும்.
ஒற்றையாட்சி முறைமையால் இந்த நாடு பேரழிவுகளைச் சந்திக்கவில்லை.
அதன் மூலம் தான், தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழக் கனவைத் தவிடு பொடியாக்கி, அவர்களை இல்லாதொழித்து, பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நாட்டை மீட்டெடுத்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





