ஆப்கானிஸ்தானில் இருந்து செப்ரெம்பர் 11ஆம் நாளுக்குள் அமெரிக்க படைகள் முழுவதையும் விலக்கிக் கொள்ள ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து மே 1ஆம் நாளுக்குள் அமெரிக்க படைகள் முழுவதையும் விலக்கிக் கொள்ள டிரம்ப் நிர்வாகம் இணங்கியிருந்த போதும், ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பின்னர், மே 1ஆம் நாளுக்குள் படைவிலக்கம் சாத்தியமற்றது என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவின் இரட்டை கோபுரம் அல்கெய்டா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட சம்பவத்தின் 20 வது ஆண்டு நிறைவு, வரும் செப்ரேம்பர் 11ஆம் நாள் அனுசரிக்கப்பட உள்ளது.
அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினர் அனைவரையும் விலக்கிக் கொள்ள ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை வெளியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





