ஸ்கொட்லாந்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் , உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பப்கள், உணவகங்கள் மற்றும் அருந்தகங்கள் நான்கு மாத கால குளிர்கால முடக்கநிலைக்கு பிறகு மீண்டும் திறக்கப்படுகின்றன.
அங்கு பயணக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதுடன், பிரித்தானியாவின் பிற பகுதிகளுக்கு பயணங்களை அனுமதிக்கப்படுகிறது
அதேநேரத்தில் நக பராமரிப்பு நிலையங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் விடுமுறை தங்குமிடங்களும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகிறது
மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு முதல் தடுப்பூசி அளவை வழங்குவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று அமைச்சர்கள் கூறுகின்றனர்.





