மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 14 பேர் இன்று நினைவுகூரப்பட்டுள்ளனர்.
குறித்த அந்த 14 பேரின் உருவப்படங்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடியில் 1987ஆம் ஆண்டு இதேநாளில், இந்திய இராவணுவ சிப்பாய்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கத்தின் புதல்வரான சக்கரவர்த்தி உட்பட 14 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
இவ்வாறான நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்று 30 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக இந்த நினைவுகூரல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.





