ஒக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைபடுத்துவதால், இலங்கை மீதான அனைத்துலக சமூகத்தின் அழுத்தம் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைபடுத்துவது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா இவ்வாறு தெரிவித்துள்ளார்.





