ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் நாளை வெள்ளிக்கிழமை பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனால் மின் இணைப்புகள் அறுந்து விழுவதுடன் பல்வேறு வகையான சேதாரங்கள் ஏறபடக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை எச்சரிக்கையில் இதனைத் தெரிவித்துள்ள கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம், நாளை வீசக்கூடும் என்று எதிர்பார்ககப்படும் இந்த பலத்த காற்றின் தாக்கம், ரொரன்ரோ பெரும்பாகம் உள்ளிட்ட ஒன்ராறியோவின் பெரும்பாலான தென் பாகங்களிலும் காணப்படக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நாளை பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில், மணிக்கு 70 இலிருந்து 80 கிலோமீட்டர் வரையில் காற்றின் வேகம் காணப்படும் எனவும், காற்றுடன் இடி முழக்கத்துடன் கூடிய மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





