கண்ணுக்குள் சத்திரசிகிச்சை செய்து மீண்டும் பார்வைப் புலனை ஏற்படுத்த விஞ்ஞானிகள் ரொபோவை பயன்படுத்தியுள்ளார்கள்.
ரோபோ மூலம் கண்ணுக்குள் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட முதலாவது சிகிச்சை இதுவாகும்.
ஒக்ஸ்போர்ட் ஜோன் ரெட்கிளிப் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை இடம்பெற்றது. இங்கு கண்ணுக்குள் ரோபோவை செலுத்திய நிபுணர்கள், மிகவும் மெல்லிய சவ்வை
அகற்றினார்கள். ஜோய் ஸ்ரிக் மூலம் இயங்க வைக்கப்பட்ட ரோபா, ஒரு மில்லி மீற்றரில் நூறில் ஒருபங்கு தடிப்பான சவ்வை அப்புறப்படுத்தியது.
இதிலுள்ள மெல்லிய ஊசி கண்ணுக்குள் செலுத்தப்பட்டு, ஜோய் ஸ்ரிக் மூலம் இயங்க வைக்கப்படுகிறது.
சத்திரசிகிச்சைக்கு உள்ளான பில் பீவர் என்ற 70 வயது மனிதர் கருத்து வெளியிடுகையில், இது தேவதைக் கதை போன்று உள்ளது என்றும், தன்போது தமக்கு கண்பார்வை தெளிவாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
இந்த நடைமுறையானது எதிர்காலத்தில் மிகவும் சிக்கலான கண் சத்திரசிகிச்சைகளை சிறப்பாக மேற்கொள்ள வழிவகுக்கக் கூடுமென விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.