குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிரியம், ஆனால் அவர்களை சாப்பிட வைப்பது மிகவும் கடினமான ஒன்று.
இதனால் குழந்தைகளின் வளர்ச்சி குறித்து கவலை கொள்ளும் பெற்றோர்கள் இன்று ஏராளம்.
- குழந்தைகளுக்கு திகட்டாமல் இருப்பதற்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காமல், ஒரு குறிப்பிட்ட முறையான இடைவெளிகள் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுக்க வேண்டும்.
- குழந்தைகளுக்கு உணவு உண்ணும் நேரம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, குழந்தைகள் சாப்பிடும் போது அவசரப்படுத்தாமல், அவர்கள் சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்ககூடாது.
- இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டவே கூடாது. மற்றவர்களோடு அமர்ந்து, குழந்தைகளை சாப்பிட விடவேண்டும். சாப்பாட்டை மேலே, கீழே இறைத்தாலும், குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடுவார்கள்.
- பழங்கள், காய்கறிகள், முழு பயறு வகைகள், பருப்பு வகைகள் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இவற்றை கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் இருக்கும்.
- ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீராவது குழந்தைகளை குடிக்க வேண்டும் என்பதால், வெறும் தண்ணீராகக் குடிக்க அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் பழச்சாறாகவோ, பானமாகவோ, மோராகவோ, மில்க் ஷேக்குகளாகவோ, இளநீராகவோ கொடுக்க வேண்டும்.
- காய்கறிகளை சாப்பிடவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு காய்களை அப்படியே கொடுக்காமல், சாண்ட்விச்சுகளாகவோ, காய் நூடுல்ஸாகவோ, ஃப்ரைட் ரைஸாகவோ செய்து கொடுக்க வெண்டும். இதனால் குழந்தைகள் சந்தோஷமாக சாப்பிடுவார்கள்.
- பழங்கள் சாப்பிட மறுத்தால், பலவகையான பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன், பால் மற்றும் தேன் கலந்து சாலட்டாகவோ, மில்க் ஷேக்குகளாகவோ கொடுத்தால் வைட்டமின், மினரல், நார்ச்சத்து எல்லாம் ஒரே உணவில் அவர்களுக்குக் கிடைக்கும், குழந்தைகளும் சாப்பிடுவார்கள்.
- அனைவரும் உட்கொள்ளும் காபி,டீ கொடுப்பதை தவிர்த்து, காலை டிபன்களான தோசை, இட்லி, சப்பாத்தி, பூரி போன்றவற்றின் வடிவங்களை மாற்றி குழந்தைகள் வியக்கும்படி செய்து கொடுத்தால், மகிழ்ச்சியோடு குழந்தைகள் சாப்பிடுவார்கள்.