உலக அளவில் பிரசித்தி பெற்று வரும் போக்கிமேன் கோ பல சாதனைகளைப் புரிந்துள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வாரத்தில் ஆகக்கூடுதலாக டவுன்லோட் செய்யப்பட்டு, கூகிள் பிளேயின் ஊடாக 50 மில்லியன் தடவைகள் இன்ஸ்டோல் செய்யப்பட்ட செயலி என்ற பெருமை இதற்குக் கிடைக்கிறது.
இது தவிர, மிகவும் வேகமாக 500 மில்லியன் டொலர்களை ஈட்டிய விளையாட்டாகவும் போக்கிமேன்-கோ அமைந்துள்ளது.
இந்த விளையாட்டு கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 60 நாட்களுக்குள் சாதனைக்குரிய வருமானத்தை ஈட்டியிருப்பதாக App Anie என்ற ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
போக்கிமேன்-கோ வை நையான்ரிக் நிறுவனம் வடிவமைத்தது. இது ஐஓஎஸ், அன்ட்ரொயிட் இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன் முதலான கருவிகளில் விளையாடக்கூடியதாகும்.