ஸ்மார்ட்போனில் சிறந்த சிக்னலை பெற வேண்டுமென்றால் போனைக்கைமாற்றிப் பாருங்கள் என்கிறார் விஞ்ஞானியொருவர்.
சில போன்களை பயன்படுத்துகையில், ஒரு கையில் அல்லாமல் மற்றைய கையில் இருக்கையில் சிறப்பாக வேலை செய்யும் என பேராசிரியர் ஹெர்ட் பெடர்ஸன் கூறுகிறார்.
ஒருவர் போனை எந்த இடத்தில் பிடித்திருக்கிறாரோ, அந்த இடத்தில் போனின் அன்டனா பொருத்தப்பட்டிருக்கக் கூடும் என்பது பேராசிரியரின் கருத்து.
சிறந்த சிக்னலைப் பெற வேண்டுமானால் சில வழிகள் இருக்கின்றன. காதருகே போனை அழுத்தமாகப் பிடிக்காமல் சற்று தளர்வாகப் பிடிக்கலாம். Hands-free ஐப் பயன்படுத்துவதாயின், போன் காற்றில் இருக்கக் கூடியவாறு பேசும் போது சிறந்த சிக்னல் கிடைக்குமென பேராசியர் குறிப்பிட்டுள்ளார்.
போனின் பெட்டியில் ஆன்டனா பற்றிய விபரங்கள் இடம்பெறுமானால், அது வாடிக்கையாளர்களுக்கு நன்மையாக இருக்குமென அவர் கூறியுள்ளார்.