கனடா நாட்டில் மகனை கொலை செய்த கொலையாளியை கண்டுபிடிக்க உதவும் நபருக்கு ரூ.14 லட்சம் சன்மானம் வழங்குவதாக தாயார் கண்ணீருடன் அறிவித்துள்ளார்.
வான்கூவர் நகரை சேர்ந்த லாரா மெக்டொனால்ட் என்பவர் ஆடம் என்ற பெயருடைய தனது 33 வயதான மகனுடன் வசித்து வந்துள்ளார்.
ஆடம் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் 10ம் திகதி ஆடம் தனது காரில் வெளியே சென்றுள்ளார்.
பின்னர், West Kelowna என்ற நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அவர் சடலமாக பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆடமின் கார் 10 கிலோ மீற்றர் தொலைவில் தனியாக நின்றுள்ளதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
கொலை நிகழ்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையிலும், பொலிசாரால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், கொலையாளியின் தாயாரான லாரா நேற்று பொலிசாருடன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது, கண்ணீர் விட்டு அழுதுக்கொண்டு பேசிய லாரா ‘மகன் கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையிலும், அவரது இழப்பை தாங்க முடியவில்லை’ என உருக்கமாக பேசியுள்ளார்.
பின்னர், மகனை கொலை செய்த கொலையாளி குறித்து துப்பு கொடுக்கும் நபருக்கு 10,000 டொலர் (14,56,400 இலங்கை ரூபாய்) சன்மானம் வழங்க தயார் என லாரா அறிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பொலிசார் ‘கொலையாளி குறித்து தகவல் அறிந்தவர்கள் பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு’ பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.