இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் தன் வீட்டில் 10 ஆண்டுகளாக மின்சாரப் பிரச்சனை உள்ளதாக கூறியுள்ளார்.
இந்திய அணியின் பண்முக ஆட்டக்காரரான அஸ்வின், சென்னையில் உள்ள தன் வீட்டில் 10 ஆண்டுகளாக மின்சாரப் பிரச்சனை இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தான் தொடர்ச்சியாகவும், நேர்மையாகவும் வருமானவரித்துறையினருக்கு வரி செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
தன் வீட்டில் மட்டுமில்லாமல் அருகே உள்ள வீடுகளுக்கும் இதே பிரச்சனை தான். தன் வீடு இருக்கும் வீதியில் ஒரு டிரான்ஸ்பர்மர் கூட இல்லை.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் தனது டுவிட்டர் பக்கம் மூலம் அஸ்வின் புகார் அளித்துள்ளார்.