கிளிநொச்சி பொதுச் சந்தையில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவைக் கடைகள் மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளது.
வெள்ளி இரவு எட்டு முப்பதுக்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து பழக் கடைகளும், 60இற்கும் மேற்பட்ட புடவைக் கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளது. இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
தீ பிடித்து எரிய தொடங்கிய நிலையில் வேகமாக வீசிய காற்று காரணமாக படிப்படியாக எல்லாக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பெரும் சுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த நிலையில் உடனடியாக காவல்துறை நீர்த்தாங்கி மூலம் தீ அனைக்கும் முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது. இருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்தும் தீச்சுவாலை விட்டு எரிந்து வேகமாக பரவியது. பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்கிகளும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டன இருந்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இதனையடுத்து கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டுவரப்பட்டு கடும் பேராட்டத்திற்கு மத்தியில் தீ தொடர்ந்தும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில் ஏற்பட்ட தீ 60இற்கும் மேற்பட்ட புடவைக் கடைகளையும், அனைத்து பழக்கடைகளையும் எரித்து அழித்துள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட இராணுவத்தினரில் ஐந்திற்கு மேற்பட்டவர்கள் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்