தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் எலினர் ஷாப்ஸ்டன்(Eleanor Sharpston) என்பவரே தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குவதற்கான இந்த பரிந்துரை முன்வைத்துள்ளார்.
விடுதலைப் புலிகள் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டமைக்கான உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் அமைப்பினை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமென அவர் விளக்கமளித்துள்ளார்.
ஐரோப்பிய நீதிமன்றங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகியன தம்மை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு விடுக்கும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் என மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகது.
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளமை முக்கிய விடயமாக நோக்கப்படுகிறது.