தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 29 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கரின் 15 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் அன்று தெரிவித்துள்ளார்.ஈகைச்சுடர் லெப்ரினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து காந்திதேசத்தின் முகத்தில் கரியை பூசிய இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நீங்கா நினைவுகளை எங்கள் மனதில் நிறுத்தி விடுதலை பயணத்தினை தொடர்வோம்..
அதேவேளை விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வான்படையினை உருவாக்கி வரலாறு படைத்த கேணல் சங்கர் அண்ணா அவர்கள் 26.09.2001 அன்று சிறீலங்கா படையினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்து 15 ஆம் ஆண்டு நினைவு நாட்களையம் இன்றைய நாளில் நினைவிற்கொள்கின்றோம்..திலீபன் ஒரு ஈடு இணையற்ற மகாத்தான தியாகத்தை புரிந்தான் அவனது மரணம் ஒருமாபெரும் வரலாற்று நிகழ்வு தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி.