கொலம்பியாவில்கடந்த 50 ஆண்டுகளாக இடம்பெற்ற போரில் அத்துமீறல்கள் புரிந்தவர்களுக்கு, அவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு எந்த விதிவிலக்கும் அளிக்கப்படாது என்று அந்த நாட்டு அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ் அறிவித்துள்ளார்.
கொலம்பிய அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ் மற்றும் டிமோசென்கோ என்றழைக்கப்படும் ஃபார்க் போராளிகள் குழுவின் தலைவர் டிமோலியோன் ஜிம்மேனேஸ் ஆகிய இருவரும், இன்று திங்கட்கிழமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள நிலையில், ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தலைவர்களுக்கும் இடையே இடம்பெறவுள்ள அமைதி ஒப்பந்த கையெழுத்து நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்கள், அமைதியை குறிக்கும் அடையாளமாக வெண்ணிற ஆடைகளை அணிந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்களில் பல லத்தீன் அமெரிக்க நாட்டு தலைவர்களும் அடங்குவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.