கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளம் பொறியியலாளர் ஒருவர் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
25 வயதான கணகராசா கோபிநாத் என்ற பொறியியலாரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக கிளிநொச்சி காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இரணைமடு குழப்பகுதியில் அவசரஅவசரமாக, இராப்பகலாக புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இப்பணியில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.