தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை கோரி 9வது நாளான 04.10.2016 அன்றும் கறுப்பு கொடியை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அந்தவகையில் மலையகத்தில் அக்கர்ப்பத்தனை பெல்மோரல் தோட்ட தொழிலாளர்கள் குறித்த தோட்டத்தில் கறுப்பு கொடிகளையும், பதாதைகளையும் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை அக்கரப்பத்தனை கிரேன்லி தோட்டத்திலும் மற்றுமொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இங்கு தொழிலாளர்கள் தேயிலை மலைகளில் கறுப்பு கொடிகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பியதோடு பதாதைகளையும் ஏந்தி தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண் தொழிலாளர்கள் பாதையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.