யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனம் ஒன்றில் இருந்து சுமார் 102 கிலோ கஞ்சாவை வவுனியா காவல்த்துறை அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளனர்.
குறித்த வாகனத்தை வவுனியா பகுதியில் இடைமறித்து சோதனையிட்ட போதே, பயண பைகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இருந்த 102 கிலோ கஞ்சா போதை பொருட்களும் காணப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா போதை பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
வாகனத்தில் இருந்து கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டதனை அடுத்து , வாகன சாரதியை காவல்த்துறையினர் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.